ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் கலை விழா
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் கலை விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகதர மதிப்பீட்டு குழு சார்பில், இளையோர் கலைவிழா 6 நாட்கள் நடந்தது. நிறைவு நாளில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மாணவர்கள் படிக்கும்போதே தங்களது தனித்திறமைகளை கண்டறிந்து அதனை வளர்த்து வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் அந்தோணி சகாய சித்ரா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story