116 பேருக்கு ரூ.20¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


116 பேருக்கு ரூ.20¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 19 March 2022 10:44 PM IST (Updated: 19 March 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

குருமணாங்குடியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 116 பேருக்கு ரூ.20¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.

சிக்கல்:
 கீழ்வேளூர் அருகே உள்ள குருமணாங்குடியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் ஊராட்சி தலைவர் நேரு வரவேற்றார். கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை உள்பட 116 பேருக்கு ரூ.20 லட்சத்து 38 ஆயிரத்து 908 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெய சித்ரகலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ராஜசேகர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, தாசில்தார் அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் ராஜகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story