நெமிலி பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணி. அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்


நெமிலி பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணி. அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 19 March 2022 10:51 PM IST (Updated: 19 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்நிலைகள் மேம்பாட்டுபணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

நெமிலி

நெமிலி பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்நிலைகள் மேம்பாட்டுபணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் பேரூராட்சியாக நெமிலி தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீர்நிலைகள் ஆழப்படுத்துதல் மற்றும் தூர்வாரும் பணி மேற்கொள்ளுதல், ரூ.27 லட்சத்து 80 ஆயிரத்தில் புன்னை பொன்னியம்மன் குளத்தை தூர்வாருதல், ரூ.25½ லட்சத்தில் மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள குட்டையை தூர்வாருதல்,  ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தில் புன்னை புதிய காலனி சாலை அருகே உள்ள குட்டையை தூர்வாருதல் உள்பட ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

பணி அட்டை

நெமிலி பேரூராட்சியில் நெமிலி, புன்னை, கறியாக்குடல் உள்ளடக்கிய வருவாய் கிராமங்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 1,792 நபர்கள் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய விருப்பம் தெரிவித்து, அவர்களுக்கான பணி அட்டையை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜா பாய், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, செயல் அலுவலர் சரவணன், உதவி செயற் பொறியாளர் அம்சா, தாசில்தார் ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள், துணைத்தலைவர் சந்திரசேகரன், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story