வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 March 2022 10:51 PM IST (Updated: 19 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

வேலூர்

தமிழகம் முழுவதும் 25-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் பஸ் நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்பட 505 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாம் நேற்று காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடந்தது. 

இதில், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக 2-வது தவணை கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி அதிகமானவர்களுக்கு போடப்பட்டது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களை சுகாதாரத்துறை துணைஇயக்குனர் பானுமதி மற்றும் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story