சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது
செஞ்சி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டனா்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கண்ணன்(வயது 26). இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சிறுமியின் தாய், செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கண்ணன், சிறுமியுடன் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இதில் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story