18 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


18 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 March 2022 11:08 PM IST (Updated: 19 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 65ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 65ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கையை அடுத்த, வாணியங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. 
சிவகங்கை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 10 லட்சத்து 38 ஆயிரத்து 310 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது இதுவரை 24 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 80 ஆயிரத்து 386 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட வர்களில் 52,829 பேருக்கும், 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்களில் 793 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 
முன்னெச்சரிக்கை
மேலும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி யாக 7,520 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 18 லட்சத்து 65 ஆயிரத்து 322 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குனர் ராம்கணேஷ் உடன் இருந்தார்.

Next Story