திருப்பத்தூர் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு
திருப்பத்தூர் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், மற்றும் கடை வாடகை, தொழில் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா கூறுகையில் திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொத்து வரி, குடிநீர் மற்றும் தொழில் வரி, குத்தகை, கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பறிமுதல், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story