கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்: மகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்: மகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 March 2022 11:36 PM IST (Updated: 19 March 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், மகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிபாளையம்:
கருத்து வேறுபாட்டல் பிரிவு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த காடச்சநல்லூரை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவருடைய மனைவி மணிமேகலை. இந்த தம்பதிக்கு 2 மகன்களும், மோகனப்பிரியா (வயது 26) எனற மகளும் இருந்தனர். மோகனப்பிரியாவுக்கும், திருப்பூரை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு தருண் என்ற மகளும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளாக மோகனப்பிரியா தனது தாய் வீட்டில் மகன் தருணுடன் வசித்து வந்தார். மகள் கனிஷ்கா சிதம்பரத்துடன் உள்ளாள்.
இளம்பெண் தற்கொலை
இதனிடையே மகள் கனிஷ்காவை பார்க்க, மோகனப்பிரியா முயன்றார். இதற்கு அவருடைய கணவர் சிதம்பரம் அனுமதிக்கவில்லை. இதனால் மோகனப்பிரியா கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மகளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மோகனப்பிரியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகளை பார்க்க கணவர் அனுமதிக்காததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story