திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் மண்டல இயக்குனர் ஆய்வு
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சுல்தானா ஆய்வு செய்தார். அப்போது அவர் நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வரிகளை முழுமையாக வசூலிக்க அறிவுறுத்திய அவர், பொதுமக்களுக்கு வரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து அவர் நகராட்சி தலைவர் நளினி, என்ஜினீயர் சண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது மண்டல என்ஜினீயர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story