பரமத்தியில் வட்டார தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஆலோசனை கூட்டம்
பரமத்தியில் வட்டார தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்தியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுனர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகளின் ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை தாங்கி, உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில்நுட்பங்கள், பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள், உயர்ரக காய்கறி தோட்டம் அமைத்தல், பந்தல் காய்கறிகள், மாடித்தோட்டம் அமைத்தல், கிச்சன் கார்டன் ஆகியவை குறித்து விளக்கமளித்தார். கால்நடை உதவி மருத்துவர் சதீஸ்குமார் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு துறையின் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், அதற்காக வழங்கப்படும் மானியங்கள் குறித்து விளக்கினார். இதில் வேளாண்மை அலுவலர் பாபு, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story