பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்


பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 12:13 AM IST (Updated: 20 March 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது

பரங்கிப்பேட்டை 

கிள்ளை பேரூராட்சி சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கிள்ளையில் பேரூராட்சி துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியார் குமரவேல், வனத்துறை அலுவலர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருராட்சி தலைவர் மல்லிகா வரவேற்றார். கூட்டத்தில் அனைத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கிள்ளை பேரூராட்சிக்குப்பட்ட கிராமங்களின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர். 

இந்த குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பது என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துபெருமாள், வட்டார கல்வி அலுவர்கள் சவுந்தரராஜன், ராஜசேகர், நகர அவைத்தலைவர் சாம்பசிவம், முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தனஜெயராமன், திராவிட கழக பேச்சாளர் யாழ்தீலீபன், வர்த்தக சங்க நிர்வாகி சசிகுமார் மற்றும் கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முடிவில் கவுன்சிலர் பாண்டியன் நன்றி கூறினார்.

Next Story