ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அருண்மொழிதேவன் ஊராட்சியில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அருண்மொழிதேவன் ஊராட்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், சிவஞானசுந்தரம் மற்றும் ஊழியர்கள் அருண்மொழிதேவன் ஊராட்சிக்கு சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story