திருக்கடையூருக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு மும்மதத்தினர் வரவேற்பு
திருக்கடையூர், மார்ச்.20- அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கைமுன்னிட்டு திருக்கடையூருக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு மும்மதத்தினர் ஆக்கூரில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருக்கடையூர்:
அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கைமுன்னிட்டு திருக்கடையூருக்கு பாதயாத்திரையாக வந்த தருமபுரம் ஆதீனத்துக்கு மும்மதத்தினர் ஆக்கூரில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தருமபுரம் ஆதீனம் பாதயாத்திரை
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வருகிற 27-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவரது வழிபாட்டு கடவுளாகிய சொக்கநாத பெருமானுடன் குருலிங்க சங்கம பாதயாத்திரையாக திருக்கடையூர் கோவிலுக்கு செல்ல நேற்று முன்தினம் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டார். பின்னர் அன்று மாலை செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தில் தங்கினார்.
இந்தநிலையில் நேற்று மாலை காளகஸ்திநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு ஆக்கூர் வழியாக இரவு திருக்கடையூர் சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் ஆதீனத்திற்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
ஆதீனத்துக்கு மும்மதத்தினர் வரவேற்பு
ஆக்கூரில் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தினரும் மேளதாளங்களுடன் கும்ப மரியாதை செலுத்தி தருமபுரம் ஆதீனத்தை வரவேற்றனர்.
அப்போது ஆக்கூர் பள்ளிவாசல் நிர்வாகசபை ஜமாத்தார்கள் துவா செய்தும், டி.இ.எல்.சி. பாதிரியார்கள் பைபிள் படித்தும், இந்து மதத்தினர் மந்திரங்கள் ஓதியும் வரவேற்பு அளித்தனர்.
ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு ஆதீனம் ஆசி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருக்கடையூர் வந்தபோது சாய்பாபா கோவில், காத்தாயி அம்மன் கோவில், ஊராட்சி மன்றம், வர்த்தக சங்கம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருக்கடையூர் கடைவீதி, சன்னதி வீதி மற்றும் 4 வீதி வழியாக கோவிலை வந்தடைந்தார்.
Related Tags :
Next Story