தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 20 March 2022 12:25 AM IST (Updated: 20 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


பஸ் வசதி இன்றி கிராம மக்கள் அவதி 
பெரம்பலூர் மாவட்டம்,  ஆலம்பாடி கிராமத்தில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதியில் ஒரு மினிபஸ் மட்டும் தினமும் காலை நேரத்தில் 9.30  மணிக்கு  இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிக அளவில் செல்வதினால் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்யும் நிலை ஏற்பட்டள்ளது. மாலையில் 6.15 மணிக்கு கடைசி பஸ்  உள்ளது. இந்த பஸ்சை தவறவிட்டால் மீண்டும் பஸ் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  ஆலம்பாடி, பெரம்பலூர். 

குண்டும், குழியுமான சாலை 
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல் மேடு பகுதியிலிருந்து கச்சியப்பன் தெரு வரை 2 கிலோ மீட்டர் துரம் வரை சாலைகள் சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வேலாயுதம்பாளைம், கரூர்.

எரியாத உயர்மின் கோபுரவிளக்கு
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மடத்துக்கடையில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேல் எரியாமல் உள்ளது. இந்த இடம் கடைகள் மற்றும் வனிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் கடைவீதிக்கு அதிகமானோர் வந்து செல்கின்றனர். வெளியூர்களுக்கு வேலை நிமித்தமாக பஸ்களில் சென்று வரும் பெண்கள் இரவு நேரங்களில் அச்சத்துடனேயே செல்கின்றனர். பொதுமக்கள் மடத்துக்கடை சாலையினை கடக்கும்போது இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் உடனடியாக பழுதடைந்துள்ள உயர்மின் கோபுர விளக்கினை சீரமைத்து ஒளிரச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மடத்துக்கடை, புதுக்கோட்டை. 

பயனற்ற ஆழ்துளை கிணறு 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி 11-வது வார்டை சேர்ந்த இந்திராநகர், அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கான மயானத்தில்  ஈமச்சடங்கு செய்ய வசதியாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுக்கான மின் மோட்டார் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பச்சபெருமாள்பட்டி, திருச்சி. 

நிறுத்தப்பட்ட அரசு பஸ்
புதுக்கோட்டை , பரம்பூர், இடையப்பட்டி, இலுப்பூர், கீரனூர் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில் பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கீரனூர், புதுக்கோட்டை. 

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் 
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், வளநாடு கைகாட்டியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கறிக்கடைகளில் சேகரமாகும் கோழிக்கழிவுகளை அதிகமாக  கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனை உண்பதற்கு நாய்கள் இப்பகுதியில் அதிகம் கூடுவதினால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே பெரிதும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
செந்தில்குமார்,  வளநாடு கைகாட்டி, திருச்சி. 

வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி கே.கே.நகரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட புறநகர்ப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியூர் செல்ல கே.கே.நகர் பஸ் நிலையத்திற்கு தங்களின் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். பின்னர் அவர்கள் இருசக்கர வாகனங்களை பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு பஸ் மூலம் வெளியூர் செல்கின்றனர். பின்னர் அங்கு பணி முடிந்து வந்து தங்களது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் நிறுத்திவிட்டு செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
புருஷோத்தமன், கே.கே.நகர், திருச்சி.


Next Story