வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
ஆத்தூரில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.
ஆத்தூர்:-
ஆத்தூர் தெற்குகாடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்கு சொந்தமான லாரியில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக்கொண்டு ஆத்தூர் தெற்குகாடு கருப்பனார் கோவில் பகுதியில் உள்ள சிவகுமார் என்பவர் தோட்டத்துக்கு வந்து கொண்டிருந்தனர். லாரியை ஆத்தூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது கருப்பனார் கோவில் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த வைக்கோல் மேலே சென்ற மின்கம்பி மீது உரசியது. இதில் வைக்கோல் தீப்பிடித்து, லாரி முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லியில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் தீயில் லாரியும், வைக்கோலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீ விபத்தின் சேத மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story