நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது.


நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது.
x
தினத்தந்தி 20 March 2022 12:31 AM IST (Updated: 20 March 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது.

மேச்சேரி:-
நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்மர் சோமேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டம்
நங்கவள்ளியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர்- சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரோட்டம் 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனம், யானை வாகனம், கருடவாகனம், ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. 
17-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் லட்சுமி நரசிம்மர் - சோமேஸ்வர் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.
சத்தாபரணம்
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை தொடங்கியது. முதலில் விநாயகர் தேரும், 2-வது தேரில் சோமேஸ்வரர் சவுந்தரவல்லி அம்பாளும், பெரிய தேரில் லட்சுமி நரசிம்ம சாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர் தாரமங்கலம் பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டது. 
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து பஸ் நிலையம் வரையும், நாளை (திங்கட்கிழமை) பஸ் நிலையத்தில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வரையும், 22-ந் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தோப்புத்தெரு பிரிவு வரையும், 23-ந் தேதி தோப்பு தெரு பிரிவில் இருந்து கோவில் முன்பு நிலை சேர்கிறது. 24-ந் தேதி இரவு 9 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Next Story