தனியார் விதை நிறுவன மேற்பார்வையாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி
தலைவாசல் அருகே தனியார் விதை நிறுவன மேற்பார்வையாளிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
சேலம்:-
தலைவாசல் அருகே உள்ள வெள்ளாயூரை சேர்ந்தவர் குமார் (வயது 33). இவர் தனியார் விதை நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், கிரெடிட் கார்டுக்கு வட்டி குறைப்பு செய்ய லிங்கிற்குள் சென்று பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய குமார் அந்த லிங்கை பதிவிறக்கம் செய்து அதில் தனது வங்கிக்கணக்கு எண், கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட்டார். இதையடுத்து அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story