மணல் லாரி உரிமையாளர்கள் 4-ந் தேதி போராட்டம் நடத்த முடிவு

திருச்சி, மார்ச்.20-
தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறக்க கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் கூறுகையில், "தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் முடங்கி உள்ளதால் தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அத்தனை பணிகளும் தொடர்ந்து தடையின்றி நடைபெறக்கோரியும், லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரியும் நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சரிடம் நேரில் சென்று மனு கொடுத்தோம். அவர்கள் கடந்த ஜனவரி 10-ந் தேதியே தமிழகம் முழுவதும் அனைத்து மணல் குவாரிகளும் இயங்கும் என தெரிவித்தனர். ஆனால், இதுவரை இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வருகிற 30-ந் தேதிக்குள் குவாரிகள் செயல்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.

Related Tags :
Next Story