போலி பாஸ்போர்ட்டில் விமானத்தில் வந்தவர் கைது


போலி பாஸ்போர்ட்டில் விமானத்தில் வந்தவர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 1:08 AM IST (Updated: 20 March 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

போலி பாஸ்போர்ட்டில் விமானத்தில் வந்தவர் கைது

செம்பட்டு,மார்ச்.20-
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் நேற்று காலை 10.30 மணிக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 48) என்பவர் ஒரத்தநாடு ஆம்பலாப்பட்டு புலவர் காடு கலையரசன் என்பவரது மகன் சதாசிவம் கலையரசன் (48) என்ற போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று  வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை திருச்சி ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

Next Story