குடிநீர் கேட்டு பெண்கள் பஸ் மறியல்


குடிநீர் கேட்டு பெண்கள் பஸ் மறியல்
x
தினத்தந்தி 20 March 2022 1:20 AM IST (Updated: 20 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு பெண்கள் பஸ் மறியல்

சமயபுரம், மார்ச்.20-
சிறுகனூர் அருகே உள்ள பாலையூர் ஊராட்சியை சேர்ந்த காவேரி கொட்டம் பகுதியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி ஊராட்சி தலைவர் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் நேற்று காலி குடங்களுடன் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி சென்ற அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து  தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story