6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைப்பு
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் இருந்து 6 டன் சிமெண்டு கழிவுகள், சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் உள்ள குப்பைக்கிடங்கிற்கு நகராட்சி பகுதிகளில் இருந்து ஏராளமான குப்பைகளை கொண்டு வந்து சேமித்து ரசாயன உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மறுசுழற்சி செய்ய இயலாத 6 டன் பிளாஸ்டிக் கழிவுகளை திருச்சியில் உள்ள சிமெண்டு ஆலைக்கு நகராட்சி சார்பில் தலைவர் செல்வசுரேஷ் பெருமாள், ஆணையாளர் கண்மணி, துணைத்தலைவர் திலகா சிற்றரசன் ஆகியோர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பொன்ராஜ், தூய்மை இந்தியா பணியாளர் ஈஸ்வரன், நகராட்சி மேஸ்திரி மில்லர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 8 மாத காலத்தில் இதுவரை 43 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story