அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்


அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2022 1:23 AM IST (Updated: 20 March 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 3 பேரை கைது செய்தனர்.

காரியாபட்டி, 
திருச்சுழி அருகே குண்டாற்றுப்படுகையில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளப்பட்டு வருவதாக திருச்சுழி சப்- இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டிக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தமிழ்பாடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழி குண்டாற்றுப்பகுதியில் அனுமதியின்றி டிப்பர் லாரியில் ஆற்றுமணல் அள்ளிக் கொண்டு வந்த லாரியை பறிமுதல் செய்து டிரைவர் வெள்ளைச்சாமியை (வயது 32) திருச்சுழி போலீசார் கைது செய்தனர். அதேபோல டி.கரிசல்குளம் பகுதி குண்டாற்று படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை ம.ரெட்டியபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த ராமர் (28), மணிகண்டன் (26) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story