புகழூர் காகித ஆலையில் வாயிற்கூட்டம்
புகழூர் காகித ஆலையில் வாயிற்கூட்டம் நடைபெற்றது.
நொய்யல்,
புகழூர் காகித ஆலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்க கவுரவ தலைவர் ஜீவானந்தம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காகித ஆலை கேட்-2 முன்பு வாயிற்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- சங்கங்களுக்கான அங்கீகார தேர்தலை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளதை கண்டிக்கிறோம். காகித ஆலை நிறுவன நாள் பரிசு பொருட்கள் 2021-ம் ஆண்டில் வழங்கப்படாமல் குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு பொருட்களை உடனடியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். சமீபகாலமாக பக்காஸ் மற்றும் பாய்லரில் இருந்து வெளியேறும் கரி துகல்களால் சுற்றுவட்டார மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். காகித ஆலை பள்ளியில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க வேண்டும். ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதில் காகித ஆலை தொழிற்சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story