தவக்கால பாதயாத்திரை


தவக்கால பாதயாத்திரை
x
தினத்தந்தி 20 March 2022 1:24 AM IST (Updated: 20 March 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

தவக்கால பாதயாத்திரை

திருச்சி, மார்ச்.20-
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் இருந்து பூண்டி மாதா கோவிலுக்கு 20-ம் ஆண்டாக நேற்று மாலை பக்தர்கள் தவக்கால பாதயாத்திரை சென்றனர். ஆலயத்தில் திருப்பலி முடிந்த பின்னர் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட தேர் புனிதம் செய்யப்பட்டு பாதயாத்திரையை பங்குத்தந்தையர்கள் தொடங்கி வைத்தனர். மாணவ-மாணவிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெறவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும், திருமண தடை நீங்க வேண்டியும், குடும்பத்தில் அமைதியும், சமாதானமும் கிடைக்க வேண்டியும் இந்த பாதயாத்திரையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை சுப்பிரமணியபுரத்தில் இருந்து புறப்பட்டு பொன்மலை வழியாக திருவெறும்பூர், கல்லணை வழியாக சென்று பூண்டியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றடைகிறது.

Next Story