ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 1:28 AM IST (Updated: 20 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஹிஜாப் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர், 
ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் முகம்மது ஹசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முகம்மது யூசுப் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட தலைவர் மதரசா பாபு முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் ஜாகீர்உசேன், செயலாளர் இர்ஷாத், கிளை பொருளாளர் முஜிபூர் ரகுமான் உள்பட ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story