தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 March 2022 1:28 AM IST (Updated: 20 March 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

மின்விளக்கு எரிந்தது
தேரேகால்புதூரில் இருந்து புதுக்கிராமம் செல்லும் சாலையில் பாரதிநகர் பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்கை மாற்றி புதிய விளக்கை அமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட வடக்கு மார்த்தால் பகுதியில் 25 வருடம் பழமையான ஒரு இரும்பு மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
               -சேக் அப்துல்காதர், மார்த்தால், திட்டுவிளை.
நிழற்குடையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை வெள்ளமடம் அருகே உள்ள கிறிஸ்துநகரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை ேசதமடைந்து, இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                      -செந்தமிழ்ச்செல்வி, ஆரல்வாய்மொழி.
விபத்து அபாயம்
கணேசபுரத்தில் இருந்து பத்திரப்பதிவு அலுவகத்துக்கு செல்லும் சாலையில் ஒரு அரசு பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் அருகில் ஜங்ஷன் பகுதியில் தொலைபேசி கேபிள் சீரமைப்பு பணிக்காக  பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்கள் ஆகியும் அந்த பள்ளம் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                             -அருண், செந்தூரான்நகர்.
நடவடிக்கை தேவை
இருளப்புரம் ஜங்ஷனில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
                               -ராஜலிங்கம், இருப்பபுரம்.

Next Story