கள்ளக்காதலியுடன் கணவர் கைது


கள்ளக்காதலியுடன் கணவர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 1:33 AM IST (Updated: 20 March 2022 1:33 AM IST)
t-max-icont-min-icon

2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கள்ளக்காதலியுடன், அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்;-
2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கள்ளக்காதலியுடன், அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
விவசாய நிலங்கள்
ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் எக்கன்டஹள்ளி பகுதியை சேர்ந்த மரகதம் (30) என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு செல்வகணபதி (7), கோகுலக்கண்ணன் (5) என்ற 2 மகன்கள் இருந்தனர். 
பிரபாகரனுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வந்து அதனை உருக்கி சிறு உருண்டையாக மாற்றி வெளியூர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். 
தற்கொலை
இந்த நிலையில் பிரபாகரனுக்கு அவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீத்தா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மரகதம் பலமுறை தனது கணவர் பிரபாகரனிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் சீத்தாவுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் மரகதம் தனது மகன்கள் செல்வகணபதி, கோகுலகண்ணன் ஆகியோருடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில் மரகத்தை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பிரபாகரன், கள்ளக்காதலி சீத்தா ஆகியோரை தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story