சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் தேரோட்டம்


சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 20 March 2022 1:40 AM IST (Updated: 20 March 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

வள்ளியூர்:
வள்ளியூர் அருகே சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் நம்பியாற்றின் தென்கரையில் சித்தூர் என்ற கிராமம் உள்ளது. இவ்வூரில் சாந்தமே உருவாக சத்தியமே வடிவமாக கொண்டு தென்கரை மகாராஜேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். 
சாஸ்தா கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோவில் ஆகும். இந்த கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
 
தேரோட்டம்
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேக பூஜை, கும்பாபிஷேக தீபாராதனை பூஜை,  இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருதல் நடக்கின்றது. 
9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 11.05 மணிக்கு மகாராஜேஸ்வரர் சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்பு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடந்தது. தேர் நிலையை வந்த பின்னர் குதிரை ஓட்டம் நடந்தது.

திரளான பக்தர்கள்
தேரோட்டத்தில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் விஜயா, செயல் அலுவலர் சாலை லட்சுமி மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பர்னபாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

Next Story