சரக்கு வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் பலி
தேவூர் அருகே சரக்கு வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தேவூர்:-
தேவூர் அருகே சரக்கு வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ெதாழிலாளர்கள்
எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் இளங்கோவன் (வயது 48), அங்கமுத்து (55), செங்கோட்டையன் (52). இவர்கள் 3 பேரும் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த நிலையில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கட்டிட கட்டுமான பணிக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். தேவூர் அருகே மூலபாதை பாரதிநகர் பகுதியில் நின்றிருந்த ஒரு சரக்கு வாகனத்தில் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளங்கோவன், அங்கமுத்து, செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் கீழே விழுந்தனர்.
2 பேர் பலி
அப்ேபாது எதிரே வந்த மற்றொரு சரக்குவாகனம் அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இளங்கோவன், அங்கமுத்து ஆகியோர் துடி,துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த செங்கோட்டையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story