கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளை அவதூறாக பேசியவர் கைது
கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளை அவதூறாக பேசியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை விமர்சித்து, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. மேலும் ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹித் ஜமாத்தின் மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா உள்ளிட்டோர் பேசினார்கள். அப்போது அவர்கள் 3 பேரும் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பேசியதாக அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவர்கள் 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கோைவ ரஹமத்துல்லா கைது செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story