சாவிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து சாவு
கண்டவிளை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள்சந்தை,
கண்டவிளை அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தனார்
கண்டன்விளை அருகே சித்தன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 65)கொத்தனார். இவரது மனைவி ரோஸ்லெட் (60). இவர் அங்குள்ள ஆலயத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.
இந்தநிலையில் ரோஸ்லெட் கடந்த 2 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவர் ஜோசப்பும் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
பரிதாப சாவு
ரோஸ்லெட்க்கு நோயின் தாக்கம் அதிகமாகவே நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் ரோஸ்லெட் பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அவரது கணவர் ஜோசப்புக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே, அவர் துக்கம் தாங்காமல் கதறி அழுதார். சிறிது நேரத்தில் அவரும் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story