மாநில கபடி போட்டி தொடக்கம்


மாநில கபடி போட்டி தொடக்கம்
x
தினத்தந்தி 20 March 2022 1:53 AM IST (Updated: 20 March 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் மாநில கபடி போட்டி தொடங்கியது.

வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், 69-வது மாநில அளவிலான சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழும தலைவர் எஸ்.தங்கப்பழம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 38 அணிகள் பங்கேற்று விளையாடின. அமெச்சூர் கபடி கழக தலைவர் ராஜா, பொதுச்செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், நிர்வாகிகள் சேர்மன் பாண்டியன், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுகிழமை) மாலையில் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Next Story