கண்மாயில் பிணமாக கிடந்த கேரள வாலிபர்


கண்மாயில் பிணமாக கிடந்த கேரள வாலிபர்
x
தினத்தந்தி 20 March 2022 1:56 AM IST (Updated: 20 March 2022 1:56 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் கண்மாயில் கேரள வாலிபர் பிணமாக கிடந்தார்.

சிவகிரி:
சிவகிரிக்கு வடக்கே தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே கருப்பசாமி கோவிலுக்கு பின்புறம் பெரியகுளம் கண்மாய் உள்ளது. அந்த கண்மாயில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தலையாரி வேல்முருகன், சிவகிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பிணத்தை கைப்பற்றி சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மேல புத்தன் வீடு பகுதியை சேர்ந்த வேலு கோபு மகன் வினோத் என்ற சங்கர் (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கேரள மாநிலத்தில் ஷேர் மார்க்கெட்டிங் தொழில் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இவர் கேரளாவில் இருந்து சிவகிரிக்கு ஏன் வந்தார், எதற்காக வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் வந்த கார், மொட்டைமலை பகுதி அருகே நின்று கொண்டிருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

Next Story