மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஆட்டோ டிரைவர் பலி
பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் ஆட்ேடா டிரைவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் ஆட்ேடா டிரைவர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ஆட்டோ டிரைவர்
பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குமார் செல்வம் (வயது 32). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் குமார் செல்வம் பாவூர்சத்திரத்திற்கு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
நெல்லை - தென்காசி மெயின்ரோட்டில் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது, எதிரே நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் கண்ணன் (27) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
சாவு
அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு ேநர் மோதியது. இதில் குமார் செல்வம், கண்ணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குமார் செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story