தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி மலை மீது அமைந்துள்ள கோவிலில் உள்ள முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மலை அடிவாரத்தில் கலையரங்கத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story