பேரன் இறந்த சோகத்தில் பாட்டி சாவு


பேரன் இறந்த சோகத்தில் பாட்டி சாவு
x
தினத்தந்தி 20 March 2022 2:11 AM IST (Updated: 20 March 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே பேரன் இறந்த சோகத்தில் பாட்டி இறந்தார்.

பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காசிப்பாண்டியன் மகன் கதிரேசன் (வயது 29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு இரவில் சென்றார். ஆனால் மறுநாள் காலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது, தோட்டத்தில் கதிரேசன் இறந்து கிடந்தார். அவர் இறந்த தகவல் அறிந்த கதிரேசனின் பாட்டி செல்லத்தாய் (90) என்பவர் அங்கு வந்தார். கதிரேசன் உடலை பார்த்து கதறி அழுதார். தனது மகளின் ஒரே மகன் இறந்து விட்டானே என்று நேற்று முன்தினம் சோகத்துடன் காணப்பட்டார். அதே சோகத்துடன் வீட்டுக்கு திரும்பி நடந்து கொண்டு இருந்தார். அப்போது, செல்லத்தாய் திடீரென்று மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை தூக்கிப் பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. பேரனும், பாட்டியும் அடுத்தடுத்து இறந்ததால் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது.

Next Story