தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம்
கடையம் அருகே தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது.
கடையம்:
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் அடிக்கடி வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்த நிலையில் கடையம் அருகே மத்தளம்பாறையில் உள்ள தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் காட்டு யானை புகுந்தது. அங்குள்ள வாழை, தென்னை மரங்களை சாய்த்தது. இதில் 41 வாழை மரங்கள், 6 தென்னை மரங்கள் சேதமடைந்தன.
நேற்று காலையில் தோட்டத்தில் ஒற்றை யானை நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி வன பாதுகாவலர் ராதை தலைமையில், வன காப்பாளர்கள் தானியேல், காட்வின் ஜாம், வன காவலர் அனுஜா, வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று, பட்டாசு வெடித்து சுமார் 3 மணி நேரம் போராடி, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகாமல் இருக்க அகழிகளை தூர்வாரி, சோலார் மின்வேலியை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story