மதம், மொழி விஷயங்களை ஆட்சியாளர்கள் கையில் எடுக்க கூடாது; தன்வீர்சேட் சொல்கிறார்


மதம், மொழி விஷயங்களை ஆட்சியாளர்கள் கையில் எடுக்க கூடாது; தன்வீர்சேட் சொல்கிறார்
x
தினத்தந்தி 20 March 2022 2:18 AM IST (Updated: 20 March 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

மதம், மொழி விஷயங்களை ஆட்சியாளர்கள் கையில் எடுக்க கூடாது என்று முன்னாள் மந்திரி தன்வீர்சேட் எம்.எல்.ஏ. கூறினார்.

மைசூரு:

ஆன்மிக விஷயங்கள்

  மைசூருவில் நேற்று முன்னாள் மந்திரி தன்வீர்சேட் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  நாட்டிலோ அல்லது மாநிலங்களிலோ எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சி நாட்டின், மக்களின் வளர்ச்சி பற்றி சிந்தனை செய்ய வேண்டுமே தவிர, ஆன்மிக விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆட்சி நடத்தக்கூடாது.

  இப்போதெல்லாம் வளர்ச்சியை விட ஆன்மிக விஷயங்களை, மத, தர்மம் விஷயங்களை எடுத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது வழக்கத்தில் வந்துள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் வளர்ச்சி பற்றி சிந்தனையே இருக்காது, அதனால் ஆன்மிக விஷயங்கள் மற்றும் மதம், மொழி விஷயங்களை ஆட்சியாளர்கள் கையில் எடுக்க கூடாது.

திரைப்படம் பார்ப்பதில்லை

  தேர்தல் வந்துவிட்டால் அதற்கு அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு தகவலை வெளியிட்டு ஆட்சியை பிடிக்க முண்டியடிக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டது காங்கிரஸ் கட்சி மட்டுமே. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைப் போன்று கொலை, கொள்ளை சம்பவங்கள் நிறைந்த படத்தை தயாரித்து வெளியிட்டால் மக்கள் அமைதி சீர்குலையும்.

  நான் சிறுவயதில் இருந்தே படம் பார்ப்பதில்லை. அதனால் எனக்கு திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமில்லை. திரைப்படங்களை எல்லாம் அரசியலுக்குள் இழுக்க கூடாது. அதையே வைத்து மக்களை ஏமாற்றக் கூடாது.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story