புதிய பாலங்கள் கட்டும் பணி


புதிய பாலங்கள் கட்டும் பணி
x
தினத்தந்தி 20 March 2022 2:20 AM IST (Updated: 20 March 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கல்லணைக்கால்வாய்-வடவாற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்;
தஞ்சை கல்லணைக்கால்வாய்-வடவாற்றில் புதிய பாலங்கள் கட்டும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். 
2 பாலங்கள்
தஞ்சை காந்திஜிசாலையில் கல்லணைக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதம் அடைந்து இருந்ததால் அவற்றை இடித்துவிட்டு புதிதாக 2 இடங்களிலும் தலா 2 பாலங்கள் வீதம் கட்டப்படுகிறது. ஒவ்வொரு பாலமும் தலா ரூ.1½ கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் கல்லணைக்கால்வாய் மற்றும் வடவாற்றின் குறுக்கே புதிய பாலங்கள் கட்டும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், புதிய பாலங்கள் எப்படி அமைய உள்ளது என்பதை வரைபடம் மூலம் பார்வையிட்டதுடன், பாலப்பணிகளை துரிதமாக கட்டி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story