பெட்ேரால் பங்க்கில் ஊழியர்களை மிரட்டி பணம் கொள்ளை
மதுரையில் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்களை மிரட்டி பணம் கொள்ளையடித்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை,
மதுரை அரசரடி, ஹார்வி நகரை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (வயது 26). இவருக்கு சிந்தாமணி நெடுங்குளம் மெயின் ரோட்டில் சொந்தமாக பெட்ரோல் பங்க் உள்ளது. சம்பவத்தன்று பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் பணியில் இருந்தனர். மேலும் மேலாளர் அறையில் ஊழியர் ஒருவர் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் நேராக மேலாளர் அறைக்கு சென்று அங்கு இருந்தவரை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். அதை பார்த்த சக ஊழியர்கள் அங்கு வேகமாக வந்தனர். அவர்களையும் அந்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டியது. பின்னர் அவர்கள் 3 பேரும் பெட்ரோல் பங்க்கில் பணப்பெட்டியில் இருந்த ரூ.68 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து உரிமையாளர் ராகேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 நபர்கள் பற்றிய அடையாளங்கள் தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story