விஷம் குடித்து கொத்தனார் பலி


விஷம் குடித்து கொத்தனார் பலி
x
தினத்தந்தி 20 March 2022 2:26 AM IST (Updated: 20 March 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

காரியாபட்டி, 
நரிக்குடி அருகே உவர்புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 23). கொத்தனார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் இவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தனக்குமார் இறந்தார். இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story