மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம்
மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டமைப்பின் கூட்டம், ஜெயங்கொண்டத்தில் வட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார். கணபதி வரவேற்றார். வட்ட செயலாளர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமமூர்த்தி வரவு, செலவினை வாசித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் ராசகோபால், கதிர்வேல், அருமைநாதன் உள்ளிட்டோர் சங்கத்தின் செயல்பாடு மற்றும் செயல்படும் விதம் குறித்து பேசினர். உடையார்பாளையம் தாலுகா பகுதிகளை சேர்ந்த சென்னை செல்லும் பயணிகள் ரெயில் சந்திப்பில் நின்று செல்கிற பல்லவன் மற்றும் வைகை ெரயில்களில் பயணம் செய்வதற்கு ஏதுவாக, விருத்தாசலம் ெரயில் சந்திப்பு வரை ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் செல்ல சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும். அரசு கலை கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு சென்று வருகிற மாணவர்களும், ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் டவுன் பஸ்கள் இயக்க அரியலூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் அரசு வாக்குறுதி தந்ததுபோல் 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கலியபெருமாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story