பாய் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம்
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நடவு பணி செய்ய பாய் நாற்றங்கால் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பனந்தாள்;
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் நடவு பணி செய்ய பாய் நாற்றங்கால் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை
விவசாயிகள் நலன் கருதி தண்ணீர் இருக்கும் போது ஜூன் மாதத்தில் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையை திறப்பது வழக்கம். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு வசதியுடன் காவிரி டெல்டா மாவட்டங்களில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறுகிய கால நெல் ரகங்களான ஆடுதுறை 36, கோ51, கோ53, திருப்பதி 5, போன்ற ரகங்களை சாகுபடி செய்ய வசதியாக அதற்கு தேவையான விதைகளை விவசாயிகள் வாங்கி திருப்பனந்தாள் ஒன்றியத்தில் சாகுபடி பணிகளை தாடங்கி உள்ளனர்.
பாய் நாற்றங்கால்
இதன்படி நடவு பணிகளுக்கு முன்னதாக பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாற்றங்கால் அமைப்பதற்கு தேவையான மக்கிய குப்பை வண்டல் மண் போன்றவற்றை நன்கு சலித்து கல் மண் கட்டிகள் ஏதுமின்றி பிளாஸ்டிக் தட்டுகளில் நிரப்பப்பட்டு நெல் விதைகள் தெளிக்கப்பட்டு நாற்று விடப்படுகிறது. இதற்கு பின்பு 17 முதல் 20 நாட்களில் தட்டுகளிலிருந்து நாற்றுகள் அப்படியே எடுக்கப்பட்டு நடவு எந்திரம் மூலம் நடவு செய்யப்படுகிறது. இந்த சாகுபடி முறையால் மகசூல் அதிகரிப்பது மட்டுமின்றி பல நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story