கர்நாடகத்தில் 3 நாட்களில் 68 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
கர்நாடகத்தில் 3 நாட்களில் 68 ஆயிரம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பெங்களூரு:
நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து, கர்நாடகத்திலும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 16-ந் தேதியில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பமானது. கர்நாடகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக சித்ரதுர்கா மாவட்டத்தில் 11 ஆயிரத்து 708 சிறுவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தார்வார், பீதர், ஹாவேரி, பெலகாவி, சிவமொக்கா, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் மட்டும் 3 நாட்களில் 50-க்கும் குறைவான சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story