தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கைது


தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கைது
x
தினத்தந்தி 20 March 2022 2:46 AM IST (Updated: 20 March 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கைது செய்யப்பட்டார்.

அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் கைது செய்யப்பட்டார். 
ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முன் தினம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதிகளை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. 
கைது
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அதிராம்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிராம்பட்டினம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து ஜமால் உஸ்மானியை கைது செய்தனர். இதனால் அதிராம்பட்டினம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story