சுற்றுலா பஸ் மோதி பெண் பலி
கன்னியாகுமரி அருகே சுற்றுலா பஸ் மோதி பெண் பலியானார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே சுற்றுலா பஸ் மோதி பெண் பலியானார்.
ராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் நேற்று மாலை தனது மனைவி தேவிகா (வயது38), மகள் துர்கா (14) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் அச்சங்குளத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டார். அச்சங்குளம் குளக்கரை வளைவு அருகே வந்த போது எதிரே வந்த கேரள தனியார் சுற்றுலா பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியசாமி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேேய தேவிகா பரிதாபமாக இறந்தார். முனியசாமிக்கும், அவரது மகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--
Related Tags :
Next Story