புகார் பெட்டி
புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்றுவருகின்றனர். இந்த நிலையில் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கியதால், தற்காலிகமாக சாலையோரத்தில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு மழைநீர் வடியவைக்கப்பட்டது. இந்த பள்ளம் தற்போது வரை மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்கவும், பள்ளத்தை மூடவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராசநிலவன், பேராவூரணி.
Related Tags :
Next Story