சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம்
தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
வல்லம்;
தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
சேதமடைந்த சாலை
தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டி பகுதியில் டி.பி சானிடோரியம் காசநோய் மருத்துவமனை, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பல தொழிற்சாலைகள் உள்ளன.
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செங்கிப்பட்டிக்கு வந்து செல்கின்றனர். செங்கிப்பட்டி பாலம் அருகே உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
சாலை மறியல்
சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் தலைமையில் ஏராளமானோர் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையை சீரமைக்கக் கோரி கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதனால் தஞ்சை- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் சாலை ஒப்பந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் போில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story