துமகூரு விபத்திற்கு காரணமான போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; குமாரசாமி வலியுறுத்தல்
துமகூரு விபத்திற்கு காரணமான போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தினார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
துமகூரு மாவட்டம் பலவள்ளி கட்டே பகுதியில் தனியார் பஸ் விபத்திற்கு உள்ளாகி 8-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு கூடுதல் நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த தனியார் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதற்கு காரணம் போக்குவரத்து துறை அதிகாரிகளின் அலட்சியம் தான்.
இந்த தனியார் பஸ் விபத்தில் சிக்க போக்குவரத்து அதிகாரிகளே முக்கிய காரணம். பஸ்களின் மேற்கூரை மீது மாணவர்கள் பயணம் செய்வது பற்றி அவா்களுக்கு தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த விபத்திற்கு காரணமான போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. அந்த பஸ்களின் உரிமம், அவற்றின் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ்கள் விபத்தில் சிக்கி சாதாரண மக்கள் பலியாவதை தடுக்க அரசு கடிவாளம் போட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story