5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
ஜமுனாமரத்தூரில் 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் 2200 லிட்டா சாராய ஊறல் அழிப்பு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில், திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் குணசேகரன் (போளூர்), ராஜா (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு), ரமேஷ் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மற்றும் போலீசார் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதி முழுவதும் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேல் நம்மியம்பட்டு மலைப்பகுதியில் 1,600 லிட்டர் சாராய ஊறல், பால்வாடி பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 2,200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் கள்ளத்தனமாக பதுக்கி வைக்கப்பட்ட 5 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story